மாநில செய்திகள்

திமுக எம்.பி.,கனிமொழி புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு + "||" + CISF officer questioned my nationality when asked to speak in Tamil or English: Kanimozhi

திமுக எம்.பி.,கனிமொழி புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு

திமுக எம்.பி.,கனிமொழி புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு
கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி அதிகாரியிடம் விசாரிக்க சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


இந்த நிலையில், இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை "நீங்கள் இந்தியரா?" என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று  டுவிட்டர் பதிவில் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி புகார் தொடர்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை எனவும்,
சிஐஎஸ்எஃப்  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் அவரது பயண விவரங்களை கோரியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்.பி.,கனிமொழி டுவீட்
இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
2. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை: பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - திமுக எம்.பி.,கனிமொழி
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.