தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் கே.கே.சைலஜா + "||" + 1,211 new COVID19 cases, 970 recoveries & 2 deaths reported in Kerala in the last 24 hours.KK Shailaja, Kerala Health Minister

கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் கே.கே.சைலஜா

கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் கே.கே.சைலஜா
கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,331 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளடு.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 76 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 78 பேர். 1,026 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.

கேரளாவில் இன்று ஒரேநாளில் 970 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,836 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12,347 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி பல்வேறு மாவட்டங்களில் 1,49,357 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன."

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க இருக்கிறது.
3. கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4. தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
5. கேரளாவில் மேலும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.