ஹாக்கி

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Hockey player Mandeep Singh confirmed corona infection

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 25 வயதான, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாலும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மன்தீப் சிங்கிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இவருடன் 5 மற்ற வீரர்களுக்கும் பெங்களூருவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6வது இந்திய வீரர் மன்தீப் சிங் ஆவார். இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த மன்ப்ரீத் சிங்(கேப்டன்), சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிஷன் பகதூர் பதக் ஆகிய 5 வீரர்களுக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டது.

இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ளதாவது;-

“மன்தீப் சிங்கிற்கு ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இவருடன் 20 வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்தது, ஆனால் நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வீரர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.