உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது + "||" + Volcanic eruption in Indonesia; ash spread to a height 5 km in the air

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது
இந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.
ஜகார்ட்டா,

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளது.


இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை இன்று வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி
இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
2. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.
3. இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது,
4. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்
இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.
5. குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் தான் கர்ப்பமானதாக கூறும் அதிசயபெண்
இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.