மாநில செய்திகள்

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + Opening of water from Bhavani Sagar Dam for irrigation on the 14th - Chief Minister Palanisamy's order

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பவானி சாகர் அணையில் இருந்து 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கி வரும் நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து வரும் 14 ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846.40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பாவனி சாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 29.5 டிஎம்சியாகவும், நீர்வரத்து 5,644 கனஅடியாகவும் உள்ளது. மேலும் பவானிசாகர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1,200 கனஅடியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
2. பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.07 அடியாக உள்ளது.
3. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 100.15 அடியாக உள்ளது.
4. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 100.17 அடியாக உள்ளது.
5. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது