தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி + "||" + Private bus catches fire in Karnataka: 5 killed

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
பெங்களூரு,

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கே.ஆர்.ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் பற்றியிருந்த தீயை அணைத்ததோடு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியை ஹிரியூர் எஸ்.பி. ராதிகா பார்வையிட்டார்.

தற்போது காயமடைந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஹிரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 6,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 6,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்
கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று
கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் மேலும் 7,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,576 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.