தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு + "||" + 56 thousand people rescued from Corona in 24 hours in India

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி, 

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரத்து 110 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 39 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணம் அடைந்தோர் விகிதமும் 70 சதவீதத்தை தாண்டி (70.38) இருக்கிறது.

தற்போது இறப்பு வீதம் 1.98 சதவீதமாக சரிந்துள்ளது.

நாட்டில் கொரோனாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 43 ஆயிரத்து 948 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 27.64 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 7 லட்சத்து 33 ஆயிரத்து 449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 2.6 கோடியாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
3. தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...