மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு + "||" + Mettur dam water level rises to 25,000 cubic feet

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,00 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
சேலம்,

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த மழையால் கா்நாடக அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.


இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்ந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மழை சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறையத் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து 5,000 கனஅடி வரை உயர்ந்து வினாடிக்கு 25,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.59 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 63.02 டி.எம்.சி அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,575 கனஅடியாக குறைந்த‌து
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 8,575 கனஅடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.