தேசிய செய்திகள்

கேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு + "||" + New houses to be built for those who lost their homes in the Kerala landslide - Chief Minister Binarayi Vijayan's announcement

கேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் சுமார் 80 பேர் மண்ணுக்குள் சிக்கினர். தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடன் சென்று நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வெளியிட்ட பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில், மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலை அரசே ஏற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2. தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
3. கேரளாவில் மேலும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4. கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...