உலக செய்திகள்

இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு + "||" + Permission to operate shopping malls in the UK - Announcement by Prime Minister Boris Johnson

இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இருப்பினும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய அவசியம் காரணமாக, பல்வேறு கட்டுப்படுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று சற்று குறைந்து வருவதால் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின் பொதுமக்களுக்கு அனுமதி
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.
2. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி
ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசான மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.
4. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்; இறுதியாண்டு மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழகம் அனுமதி
புதுச்சேரி கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
5. தஞ்சை பெரிய கோவிலில் நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி
தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...