தேசிய செய்திகள்

பேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம் -பாஜக பதிலடி + "||" + "BJP Controls Facebook," Says Rahul Gandhi; "Loser," Retorts Minister

பேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சனம் -பாஜக பதிலடி

பேஸ்புக்கை கட்டுக்குள் வைத்திருப்பதாக ராகுல்  காந்தி விமர்சனம் -பாஜக பதிலடி
பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காடி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.
புதுடெல்லி,

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் முகநூல் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காடி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.   வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் வாட்ஸ்அப், முகநூலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. 

சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இறுதியாக முகநூலின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன” என்று கூறியிருந்தார்.

பாஜகவினர் வெறுப்பு பேச்சை கண்டித்தால், நாட்டில்  பேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி கூறியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட காப்பாற்ற முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர்.  

இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத், “ தேர்தலுக்கு முன்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி அமைத்து தரவுகளை பெற்று கையும் களவுமாக பிடிபட்ட நீங்கள், இப்போது எங்களை கேள்விக்குட்படுத்த வேண்டுமா? என்று வினவியுள்ளார்.

ஆனால், இத்தகைய தகவல்களை மறுத்துள்ள பேஸ்புக்,  அரசியல் மற்றும் கட்சி சார்பற்று கொள்கைகளை மட்டுமே கடைபிடிப்பதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
3. புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
4. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.
5. பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.