உலக செய்திகள்

பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல் + "||" + Coronavirus strain that is '10 times more infectious' detected in Malaysia

பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்

பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோலாலம்பூர்

பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல்  விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது:மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் மேலும் 2,522 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.14 லட்சமாக உயர்வு; இதுவரை 6.75 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.
2. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
4. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
5. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.