மாநில செய்திகள்

இ பாஸ் நடைமுறையில் தளா்வு:சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு + "||" + E Boss practice Increase in domestic passenger arrivals at Chennai Airport

இ பாஸ் நடைமுறையில் தளா்வு:சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

இ பாஸ் நடைமுறையில் தளா்வு:சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்புக்கு காரணம், தமிழ்நாட்டில் இன்றிலிருந்து இ பாஸ் நடைமுறையில் தளா்வுகள் அதிகரித்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
சென்னை

கொரோனா வைரஸ் ஊரடங்கால் சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து மே-24 ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

மே மாதம் 25-ஆம் தேதியிலிருந்து குறைந்த அளவு உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் 25, வரும் விமானங்கள் 25 என்று மொத்தம் 50 விமானங்களில் சுமார் 3 ஆயிரம் பயணிகளே பயணித்தனா். அதுபடிப்படியாக அதிகரித்து 60 விமானங்களில் சுமா 6 ஆயிரம் பேராக உயா்ந்தது.

நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே விமானத்தை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையம் மூலம்  மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணாளிகளின்  எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கி கொண்டிருந்த மக்கள் தற்போது விமானங்கள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

பொது போக்குவரத்துகுத் தடை, சிக்கலான இ- பாஸ் நடைமுறை, அவசர நிலை, போனற காரணங்களால் மாநிலத்திற்குள் செல்ல மக்ககள் விமான சேவையை பெரிதும் விரும்புகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 1,45,671 பேர் வருகை தந்துள்ளனர். இது, முந்தைய மாதத்தை விட 6.6  சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முழு ஊரடங்கு அனுமதித்த நிலையிலும் கூட, சென்னை விமான நிலையம் விதிமுறைகள்படி, தடையில்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது . விமானம் பயணர்கள்  தங்கள் பயணச் சீட்டுகளை இ- பாஸாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் பயணிகள் எண்ணிக்கை சுமார் 7,500 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் 38 விமானங்களில் சுமார் 4,500 போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா். அதைப்போல் சென்னையிலிருந்து புறப்படும் 39 விமானங்களில் சுமார் 3 ஆயிரம் போ் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனா். கடந்த இரண்டரை மாதங்களில் இன்றுதான் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக டெல்லி,ஐதராபாத், பெங்களூா், பாட்னா, ஜெய்ப்பூா், கவுகாத்தி, புவனேஸ்வா், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களிலிருந்து அதிகமான பயணிகள் சென்னை வருகின்றனா். அதே நேரத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பாக கடப்பாவுக்கு 8 பேரும், திருச்சிக்கு 22 பேரும், மும்பைக்கு 54 பேரும் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்புக்கு காரணம், தமிழ்நாட்டில் இன்றிலிருந்து இ பாஸ் நடைமுறையில் தளா்வுகள் அதிகரித்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த சிலதினங்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்
சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவையில் 15 ஆயிரம் பேர் பயணம்
சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவைகளில் 15 ஆயிரத்து 350 பேர் பயணம் செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை விமான நிலையத்தில் இடி-மின்னலுடன் பெய்த மழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வானத்தில் வட்டமடித்தன.
4. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் மீண்டும் திறப்பு
சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் பயணிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
5. சென்னை விமான நிலையத்தில் 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்-மருந்து விற்பனையாளர் கைது
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.