மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு + "||" + High Court ruling against Sterlite: Welcome to various party leaders

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு அறிவித்தனர்.

அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், “ நல்ல வரவேற்க தகுந்த தீர்ப்பு. ஏற்கெனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தை காத்திடும் மகத்தான தீர்ப்பு. என்றும், இந்த தீர்ப்பினை வரவேற்று அமைச்சரவைத் தீர்மானம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது” என்று கூறினார்.

தீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கையில், “சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கையில், “மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி. தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்
கடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
5. “கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டது” - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.