தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் + "||" + Union Cabinet meeting chaired by Prime Minister Modi today

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொளி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி: எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதால் எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. ”கொரோனா தடுப்பூசி வதந்திகளை வீழ்த்துங்கள்” இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில், பொய்களையும், வதந்திகளையும் சரியான தகவல்கள் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
3. சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
4. குடியரசு தின அணிவகுப்பு: அதில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி
குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் அடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா - பிரதமர் மோடி வழங்கினார்
அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார்.