மாநில செய்திகள்

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை + "||" + Government will take action if Ganesha statue procession is held in violation of ban - Chennai High Court hopes

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அதை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தடையை மீறி சிலை நிறுவப்படும் என இந்து முன்னணியினர் மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மாணவர் காங்கிரசார் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
10 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்தக்கோரி புதுவையில் மாணவர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட போலீஸ்துறை சார்பில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
3. டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய தடையை மீறி பட்டாசுகளை வெடித்த மக்கள்
டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த முழு தடையை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.
4. விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதனை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தொடங்கி வைத்தார்.
5. அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: சட்டசபை நோக்கி பார்வையற்றோர் ஊர்வலம்
புதுச்சேரி பார்வையற்றோர் உரிமைக்குரல் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பன் கலையரங்கம் அருகே இருந்து சட்டசபை நோக்கி நேற்று ஊர்வலமாக சென்றனர்.