தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + J&K: Three terrorists killed in two separate encounters with security forces; operation underway in Kulgam

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்த பழத்தோட்டத்தில் அதிரடியாக புகுந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, சோபியான் மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள்  பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.                  
இது குறித்து காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியதாவது:- காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 3 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டவர்களில் 4 பேர் காஷ்மீரின் டாப்-10 பயங்கரவாதிகளாவர் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை சீரமைத்த இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை இந்திய இராணுவம் சீரமைத்து உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
3. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியானார்கள். 3 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்.
4. ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
5. ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.