தேசிய செய்திகள்

கொரோனா தொற்றுக்கு எதிராக டெல்லியில் 58 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி - மந்திரி சத்யேந்தர் ஜெயின் அறிவிப்பு + "||" + Immunity for 58 lakh people in Delhi against corona infection - Minister Satyender Jain

கொரோனா தொற்றுக்கு எதிராக டெல்லியில் 58 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி - மந்திரி சத்யேந்தர் ஜெயின் அறிவிப்பு

கொரோனா தொற்றுக்கு எதிராக டெல்லியில் 58 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி - மந்திரி சத்யேந்தர் ஜெயின் அறிவிப்பு
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 58 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்பட்டுள்ளதாக மந்திரி சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லி, முதலில் கொரோனா தொற்று மையமாக திகழ்ந்தது. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அங்கு இந்த தொற்று 1.56 லட்சம் பேருக்கு ஏற்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.


இந்த நிலையில், மக்களிடம் கொரோனாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்புச்சக்தி பற்றி அறிய 2-வது ’செரோ சர்வே’ மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் குறித்து மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் நிருபர்களிடம் நேற்று விளக்கினார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

* ஆகஸ்டு 1 முதல் 7 வரையில் செரோ சர்வே எடுக்கப்பட்டது. இதில் 15 ஆயிரம் மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம் 29.1 சதவீதத்தினருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 58 லட்சம் பேரிடம் கொரோனா எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

* இவர்கள் அனைவரும் அறிகுறியற்றவர்கள், கொரோனாவில் இருந்து தாமாகவே குணம் அடைந்தவர்கள், அதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருக்கிறது.

* முதல் முறை செரோ சர்வே எடுக்கப்பட்டபோது 21 ஆயிரத்து 387 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 2-வது முறை இது 15 ஆயிரம் ஆகும். இரண்டாவது சர்வேயில், 28.3 சதவீத ஆண்களிடமும், 32.2 சதவீத பெண்களிடமும் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 34.7 சதவீதத்தினர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 18-49 வயதினரில் 28.5 சதவீதத்தினரிடையே நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31.2 சதவீதத்தினருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்பட்டுள்ளது.

* கிழக்கு டெல்லியில் அதிகபட்சமாக 33.2 சதவீதத்தினரிடம் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி உள்ளது.

* நல்ல விஷயம் என்னவென்றால், நிறைய பேர் கொரோனாவை தோற்கடித்து வென்றிருக்கிறார்கள். ஆனால் இன்னும் மந்தை எதிர்ப்புச்சக்தியை அடையாததால், எஞ்சியவர்கள் தொற்றுக்கு பயப்படுகிறார்கள். அந்த வகையில் 70 சதவீதத்தினர் உடலில் இன்னும் நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படவில்லை.

இந்த தகவல்களை டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு
மாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5. கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா மேலும் 66 பேர் சாவு
கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 66 பேர் இறந்துள்ளனர்.