மாநில செய்திகள்

கேல்ரத்னா விருது: தடகள வீரர் மாரியப்பனுக்கு பொருத்தமான அங்கீகாரம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை + "||" + Kelratna Award: Appropriate Recognition for Athlete Mariappan - Report by Dr. Anbumani Ramadas

கேல்ரத்னா விருது: தடகள வீரர் மாரியப்பனுக்கு பொருத்தமான அங்கீகாரம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கேல்ரத்னா விருது: தடகள வீரர் மாரியப்பனுக்கு பொருத்தமான அங்கீகாரம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தடகள வீரர் மாரியப்பனுக்கு கேல்ரத்னா விருது பொருத்தமான அங்கீகாரம் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை,

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயர்ந்த கவுரவமான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுகளும், 27 பேருக்கு அர்ஜூனா விருதுகளும், 9 பேருக்கு துரோணாச்சாரியா விருதுகளும், 14 பேருக்கு தயான் சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து இளம்வயதில் விபத்தில் வலது காலை இழந்த மாரியப்பன், தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றது போற்றுதலுக்கு உரிய சாதனை ஆகும். அவரது தாயார் சரோஜா கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் மகனை வளர்த்து சாதனை படைக்க வைத்திருக்கிறார். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும், வறுமை வாட்டினாலும் முயற்சி செய்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு மாரியப்பன் தான் சிறந்த உதாரணம். அவருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிக பொருத்தமான அங்கீகாரம் ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.