தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Gun battle in Kashmir: Terrorist shooting

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாரமுல்லா,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் உள்ள சலூசா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு ராஷ்டிரீய ரைபிள்ஸ், ஜம்மு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றபோது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட வீரர்கள் பதிலடி கொடுத்தனர். சிறிதுநேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அவர் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. துப்பாக்கி சண்டை நடந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 17-ந்தேதி நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை பயங்கரவாதிகள் வெளியிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஒரு பயங்கரவாதி தற்போது சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
4. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.
5. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.