மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு + "||" + Gold price rises by Rs 136 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.
சென்னை,

தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த 8-ந் தேதியில் இருந்து சரிவை நோக்கி சென்றது. அதன்பின்னர் கடந்த 14-ந்தேதியில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது.


நேற்று மாலைநேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.17-ம், பவுனுக்கு ரூ.136-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 48-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 384-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டாலும், வெள்ளி விலை குறைந்திருந்தது. கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் 72 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆனது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 842 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. பெங்களூரு விமான நிலைய குடோனில் 2½ கிலோ தங்கம் மாயம் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
பெங்களூரு விமான நிலைய குடோனில் வைக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
5. தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது
ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.