தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல்லை கடந்தது; ஒரே நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை + "||" + India crosses new milestone in corona test; 10 lakh samples tested in a single day

கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல்லை கடந்தது; ஒரே நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை

கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல்லை கடந்தது; ஒரே நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை
கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல் கல்லை கடந்தது. ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

உலக நாடுகளிலேயே அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்கிற முதல் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. கொரோனா பரிசோதனையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவத்தொடங்கியபோது கடந்த ஜனவரி மாதம் நாட்டில் ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் தான் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக சுகாதார கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய பரிசோதனைக்கூடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.


தற்போது நாட்டில் அரசு துறையில் 983, தனியார் துறையில் 528 என மொத்தம் 1,511 பரிசோதனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு நாளில் 10 லட்சம் பரிசோதனைகள் என்ற இலக்கை நோக்கி நாட்டை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வழிநடத்தின.

அதன் பயனாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3.8 லட்சம் மாதிரிகள் துரித ஆன்டிஜன் பரிசோதனை முறையின் கீழ் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியா ஒரு நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை என்ற இலக்கை எட்டியது. புதிய மைல் கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் தற்போது 3 கோடியே 44 லட்சத்து 91 ஆயிரத்து 73 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 28 சதவீத பரிசோதனைகள் துரித ஆன்டிஜன் பரிசோதனைகள் ஆகும்.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறுகையில், “மத்திய, மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உறுதியான, கவனம் செலுத்திய, நிலையான, ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு சான்றுதான், 24 மணி நேரத்தில் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது. இதன்மூலம் ஒரு நாளில் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை என்ற இலக்கு வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

வெள்ளிக்கிழமையன்று 10 லட்சத்துக்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதின் விளைவாகத்தான் இந்தியாவில் முன்எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
2. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
3. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது