மாநில செய்திகள்

இன்று பிறந்தநாள்: விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Today is the birthday: Edappadi Palanisamy wishes Vijayakanth

இன்று பிறந்தநாள்: விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இன்று பிறந்தநாள்: விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

25-ந் தேதியன்று (இன்று) பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் உள்ள விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் 2 பேரது வீடுகளிலும் தீவிரமாக சோதனையிட்டனர்.
2. சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும்- தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் - பிரேமலதா விஜயகாந்த்
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்; தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.