மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் - பிரேமலதா விஜயகாந்த் + "||" + To stand alone in the Assembly elections Is the will of the volunteers - Premalatha Vijayakanth

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் - பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் - பிரேமலதா விஜயகாந்த்
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்; தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை

தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

அவர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம் முன் கூடியிருந்த தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக யாரையும் விஜயகாந்த் சந்திக்கவில்லை என்றும், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறோம்

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடருகிறோம். எதிர்காலத்தில் என்ன நிலை? என்பதை நேரம் வரும் போது பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார். தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விருப்பம் 

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

தமிழ் மொழியே நம் உயிர் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்களின் வீடுகளில் உள்ள பிள்ளைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா? 

தேசியக் கொடியை அவமதித்த விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்பது ரஜினிக்கே தெரியாத நிலையில், தமக்கு எவ்வாறு தெரியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் உள்ள விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் 2 பேரது வீடுகளிலும் தீவிரமாக சோதனையிட்டனர்.
2. சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும்- தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
சட்டசபை தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. இன்று பிறந்தநாள்: விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.