தேசிய செய்திகள்

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால்,அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும்- ப.சிதம்பரம் + "||" + 'Discontent always brings about change': P Chidambaram sees positive in internal rift over Congress top post

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால்,அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும்- ப.சிதம்பரம்

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால்,அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும்- ப.சிதம்பரம்
ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும். என ப.சிதம்பரம் கூறினார்.
புதுடெல்லி

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தி்ல ப.சிதம்பரமும் பங்கேற்றார். அந்தக் கூட்டம் முடிந்தபின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சியின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துதான் கடிதம் எழுதினார்கள். பாஜகவைத் தீவிரமாக எதிர்த்துவரும் ராகுல் காந்தியைப் போல், என்னைப் போல், கடிதம் எழுதிய தலைவர்களும் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருக்கும் விஷயங்களைப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி யாரையும் சொல்லவில்லை.  ராகுல் காந்தி குற்றம்சாட்டிப் பேசியதாக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன.

காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் கவலைகளைத் தெரிவித்தார்கள், அவர்களின் குறைகள் அடையாளம் காணப்பட்டன. அங்கு எப்போதுமே அதிருப்தி இருக்கிறது.

உண்மையில், சில அதிருப்திகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. அதிருப்தி இல்லாவிட்டால், மாற்றம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது.

காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் குறைகளைச் சொன்னார்கள், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கான தீர்வும் காணப்பட்டிருக்கிறது.

மிக விரைவாக காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர விதிகளில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும். அவை கட்சியை முன்னோக்கி நகர்த்திச் சென்று, இன்னும் வீரியமாகச் செயல்பட வைக்கும்.

எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றாகச் செல்கிறது என்று ஒருபோதும் சொல்வதில்லை. கடலில் உள்ள அலைகள் எப்போதாவது அமைதியாக இருந்து நீங்கள் கண்டதுண்டா?

அலைகள் தொடர்ந்து வருவதால்தான் நாம் அதைக் கடல் என்று அழைக்கிறோம். இல்லாவிட்டால் உயிரற்ற கடல் என்று கூறுவோம். ஆதலால், கேள்விகள், அதிருப்திகள் கட்சிக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

செயற்குழுக் கூட்டத்தில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். இது கட்சியை முன்னோக்கி நகர்த்திச் சென்று, இன்னும் வீரியமாகச் செயல்பட வைக்கும்' இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி பின்னடைவுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சுருங்கியது
புதுச்சேரி பின்னடைவுடன் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சுருங்கி உள்ளது.
2. எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பேரணி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி சிலை அருகே கையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.
4. ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு
ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு.
5. 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.