மாநில செய்திகள்

தொடர் சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை - 18 நாட்களில் ரூ.3,960 குறைந்தது + "||" + Gold prices fall to Rs 3,960 in 18 days

தொடர் சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை - 18 நாட்களில் ரூ.3,960 குறைந்தது

தொடர் சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை - 18 நாட்களில் ரூ.3,960 குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.576 குறைந்தது. கடந்த 18 நாட்களில் பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 960 சரிந்து இருக்கிறது.
சென்னை,

தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை நோக்கி செல்கிறது. கடந்த 7-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்து 328 என்ற வரலாறு காணாத விலை உயர்வை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருக்கிறது. நேற்றும் அதன் விலை குறைந்து இருந்தது.


சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 993-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 944-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.72-ம், பவுனுக்கு ரூ.576-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 921-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 368-க்கும் விற்பனை ஆனது. கடந்த 18 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 960 சரிந்து இருக்கிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. நேற்று கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800-ம் சரிந்து, ஒரு கிராம் 71 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை தொடர் சரிவை நோக்கி செல்வதற்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஊரடங்கு காலத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்திருந்தனர். அதனால் விலை உயர்ந்து இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் இருப்பதால் மற்ற துறைகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்ற துறைகளின் மீது கவனம் செலுத்த தொடங்கியதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதேபோல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் தான் தங்கம் விலை குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 842 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. பெங்களூரு விமான நிலைய குடோனில் 2½ கிலோ தங்கம் மாயம் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
பெங்களூரு விமான நிலைய குடோனில் வைக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட 2½ கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
5. தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது
ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.