உலக செய்திகள்

பாகிஸ்தான் கேட்ட உதவியை செய்ய மறுத்த ஜெர்மனி, மூக்குடைபட்ட இம்ரான்கான் + "||" + Angela Merkel dashes Imran Khan hopes to make Pak subs more lethal, says won’t help

பாகிஸ்தான் கேட்ட உதவியை செய்ய மறுத்த ஜெர்மனி, மூக்குடைபட்ட இம்ரான்கான்

பாகிஸ்தான் கேட்ட உதவியை செய்ய மறுத்த ஜெர்மனி, மூக்குடைபட்ட இம்ரான்கான்
பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவதற்காக ஒரு ’பயங்கர’ கருவியை ஜெர்மனியிடம் கேட்க, கொடுக்க முடியாது என மறுத்துவிட்டது ஜெர்மனி!
பெர்லின்

பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக்கப்பல்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தரம் உயர்த்தி வருகிறது. சாதாரணமாக நீர்மூழ்கிக்கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் வலம் வந்தாலும், இரண்டு நாளுக்கொருமுறையாவது கடல் பரப்புக்கு வந்துதான் ஆகவேண்டுமாம்.

ஆனால், அப்படி கடல் பரப்புக்கு மேலே வராமலே சமாளிப்பதற்கும் ஒரு அமைப்பு அல்லது தொழில் நுட்பம் உள்ளது.அதன்பெயர் ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் (Air Independent Propulsion)இந்த அமைப்பை பயன்படுத்தும் பட்சத்தில் வாரக்கணக்கில் நீர்மூழ்கிகள் தண்ணீர் பரப்புக்கு வராமலே சமாளிக்க முடியும்.

 பல வாரங்கள் தண்ணீருக்குள் மறைந்திருந்து தாக்க இந்த நீர்மூழ்கிக்கப்பல்களால் முடியும், தாக்கிவிட்டு தப்பிவிடவும் முடியும் என்பதால் ஜெர்மனியிடம் அந்த அமைப்பை கேட்டுள்ளது பாகிஸ்தான்.

ஆனால், ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான பாதுகாப்புக்குழு, அந்த அமைப்பை பாகிஸ்தானுக்கு கொடுக்க மறுத்துவிட்டதால் மூக்குடைபட்டிருக்கிறது பாகிஸ்தான்.

ஜெர்மனி மறுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது... 2017ஆம் ஆண்டு, காபூலில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை தண்டிக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.

அந்த வெடிகுண்டு சம்பவத்தில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவு உள்ளது. ஆகவே, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலாததாலேயே அதன் கோரிக்கையை ஜெர்மனி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
2. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.
பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.
3. பாகிஸ்தானில் ராணுவம்- சிந்து மாகாண காவல் துறை இடையே பதற்றம்
பாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் 10 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலியானார்கள்
5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.