மாநில செய்திகள்

காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது + "||" + Revenge on a schoolmate Student arrested for pornographic portrayal of mother

காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது

காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த சமூக வலைதளத்தில்புகைப்படம் வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை

சென்னையில், காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்கும் நோக்கில் மாணவியின் தாயாரான பெண் தொழிலதிபரின் புகைப்படங்களை, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில்  பதிவிட்ட 12-ம் வகுப்பு மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்  அடைக்கப்பட்டுள்ளான்.

சென்னை அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான பெண் தொழிலதிபரை, கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளான். இந்நிலையில், அவர் எதார்த்தமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பர்த்தபோது தனது பெயரிலேயே போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதில் தனது புகைப்படம் ஆபாசமாக பதிவிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் ஐபி முகவரியின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், இதை செய்தது ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் என்பது உறுதியானது.

விசாரணையில், ஒரே பள்ளியில் பயின்று வந்த தொழிலதிபரின் மகளும், அந்த மாணவனும் நட்பாக பழகி வந்துள்ளார். திடீரென மாணவன் காதலிப்பதாக கூறியதும், மாணவி அவனுடன் ஆன பழக்கத்தை குறைத்துள்ளார். இதற்கு, மாணவியின் தாயார்தான் காரணம் என கருதி, அவரை பழிவாங்கவே புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமுக வலைதளங்களில் பதிவிட்டதாக மாணவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி மாணவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதால் காரணமாக நடந்த கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடம் : என்.சி.ஆர்.பி.
கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகள் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது என தேசிய குற்றப் பதிவு பணியக புள்ளிவிவரம் தெரிவித்து உள்ளது.
2. சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.