உலக செய்திகள்

உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...? + "||" + Japan Prime Minister Shinzo Abe to resign over health problems: Local media

உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...?

உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...?
உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டோக்கியோ

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப் பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

"அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய விரும்புகிறார்,நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.

 
பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன, ஆனால் குறிப்பிடப்படாத நோய் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டார்.  பின்னர் சமீபத்திய நாட்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
2. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இபராகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது
4. லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது
5. ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.