மாநில செய்திகள்

திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை + "||" + Thiruvarur With representatives of small and marginal agricultural associations Chief Minister Palanisamy held consultations.

திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொணடனர்.
சென்னை

திருவாரூரில் ரூ.22.06 கோடியில்  23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.781 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பில் நல உதவி வழங்கபட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  


திருவாரூரில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 400 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

நடமாடும் மருத்துவக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூரில், அரசின் நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 10,014 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. திருவாரூரில் 8321 சுய உதவிக்குழுக்களில் 93960 உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.568 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொணடனர்


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு
திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.
3. திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைப்பு
திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
4. திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை
திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு தாசில்தால் சீல் வைத்தார்.
5. திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி பசுமாடு சாவு
திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. முத்துப்பேட்டையில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.