தேசிய செய்திகள்

2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர் + "||" + Rahul Gandhi May Not Lead Congress To 2024 Win, Says Letter-Writer

2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர்

2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர்
ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியாது என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறி உள்ளார்.
புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10-ந் தேதியுடன் ஓராண்டு ஆகிறது.


சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 காங்கிரஸ் தலைவர்கள் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் "முழுநேர, புலப்படும் தலைமை" என்று அழைப்பு விடுத்து இருந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.

"கடிதத்தில் முக்கிய கையொப்பமிட்டவர்களில் ஒருவர், பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு என்டி  டிடிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

"ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் கூற முடியாது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில், கட்சியால் வெற்றி பெற  முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேவையான இடங்களைப் பெற,

"நாக்பூர் முதல் சிம்லா வரை (நாட்டின் வடக்குப் பகுதியில்), கட்சிக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர், அதில் எட்டு இடங்கள் பஞ்சாபிலிருந்து வந்தவை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும், வேறு ஒரு உண்மை இருக்கிறது.

யுத்தம் தனிநபர்களைப் பற்றியது அல்ல, பிரச்சினைகள் பற்றியது. சிறந்த அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையில் மாற்றுக் கதைகளை உருவாக்க உதவுவது காங்கிரசுக்கு உதவும்.

கடித எழுதியவர்களில் பெரும்பாலோர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பதால், அவர்கள் கட்சிக்கு உறுதியுடன் இருப்பதாகவும், சோனியா காந்தி மீது மிக உயர்ந்த மரியாதை இருப்பதாகவும் கூறுகிறார்கள். எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் இருந்து  கட்சி மீண்டுவரவும்  பாஜகவை வெற்றிபெறவும் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தலைவர் சோனியா காந்தி, நியாயமான எண்ணம் கொண்டவர், தனது வார்த்தையை கடைப்பிடிப்பார், நிச்சயமாக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
2. பா.ஜனதா அரசை வெற்றிபெற விடக்கூடாது - காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
பா.ஜனதா அரசு தனது ஜனநாயக விரோத செயல்களில் வெற்றிபெற விடக்கூடாது என்று காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
3. கோவாவில் கோவில்களை திறக்க கவர்னர் கடிதம் எழுதாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள கோவாவில் கோவில்களை திறக்க ஏன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
4. காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை;அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் - நடிகை குஷ்பு
காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
5. குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, தலைவராக இல்லை -தமிழக காங்கிரஸ்
குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, தலைவராக பார்க்கவில்ல என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து உள்ளனர்.