கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ரெய்னா விலகல் + "||" + Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season.

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ரெய்னா விலகல்

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ரெய்னா விலகல்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துபாய்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணி பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் என 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா  போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணி சிஇஒ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
எல்லையில் பழைய சூழலை திரும்பக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
2. லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
4. சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
சீனாவை வீழ்த்தி ஐநா சபையின் ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையகத்தின் உறுப்பினராக, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது; மாநில வாரியாக பாதிப்பு விவரம் வருமாறு:-