மாநில செய்திகள்

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது- முதல்வர் பழனிசாமி + "||" + Tamil Nadu government is gradually offering relaxations - Chief Minister Palanisamy

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது- முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது- முதல்வர் பழனிசாமி
தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் கொண்டு வரப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- “ கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.  சுகாதார பணியாளர்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. தொழில் பணிகள் தொய்வில்லாமல் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.  கொரோனா காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. 

கொரோனா காலத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
2. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
3. ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் தொப்பூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய குறுவனம் பொதுமக்கள் வரவேற்பு
தொப்பூர் அருகே ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரியவகை மரக்கன்றுகளை நட்டு குறு வனத்தை உருவாக்கியுள்ளனர். இது அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
4. வரும் செப்.25 -க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு கிட்டதட்ட 173 நாட்கள் ஆகின்றன.
5. புதுச்சேரியில் மேலும் 11 இடங்களில் முழு ஊரடங்கு கலெக்டர் அருண் உத்தரவு
புதுவையில் மேலும் 11 இடங்களில் உள்ளூர் ஊரடங்கு பிறப்பித்து கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.