தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்:பலியான சீன சிப்பாயின் கல்லறை படம் வைரலானது + "||" + Picture of Chinese soldier's tombstone goes viral on social media, speaks of Chinese PLA losses in Galwan Valley clash

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்:பலியான சீன சிப்பாயின் கல்லறை படம் வைரலானது

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்:பலியான சீன சிப்பாயின் கல்லறை படம் வைரலானது
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்டு பலியான சீன சிப்பாயின் கல்லறையின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை


இந்த நிலையில்  லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மோதலில் ஈடுபட்ட சீன போர் வீரரின் கல்லறை  படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சீன வீரரை அடையாளம் காணும் கல்லறையின் படம் சீன சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.சென் சியாங்ராங் என அடையாளம் காணப்பட்ட வீரரின் கல்லறைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுவரை, சீன அரசாங்கத்திடமிருந்தோ அல்லது இராணுவத்தினரிடமிருந்தோ கல்லறை இருப்பதாகக் கூறப்படும் எந்தவொரு பதிலும் வரவில்லை, அதன் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சீனா மோதலில் யாரும் உயிர் இழக்கவில்லை என கூறிய நிலையில் இந்த கல்லறைப்படம் வெளியாகி உள்ளது.

அந்த கல்லறையில் மாண்டரின் மொழியில் "சென் சியாங்ரோவின் கல்லறை. 69316 துருப்புக்களின் சிப்பாய், பிங்னான், புஜியான். அவர் 2020 ஜூன் மாதம் இந்தியாவின் எல்லைப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார், மேலும் மத்திய இராணுவ ஆணையத்தால் மரணத்திற்குப் பின் நினைவு கூரபபட்டார்.சிப்பாய் டிசம்பர் 2001 இல் பிறந்தார், வெறும் 19 வயதுதான் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த் நிலையில் கல்லறையின் புகைப்படத்தை பகிர்ந்த சீன வீரர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலி உறுதியானது
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்த தகவல்கள் உறுதியானது
2. கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் ; சீன ராணுவம் மறுப்பு
கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவினர் இதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனை சீன ராணுவம் மறுத்து உள்ளது.
3. கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் விலகல்
கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் வெளியேறி வருகின்றன.
4. கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது
கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.
5. கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா? - பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா என பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.