தேசிய செய்திகள்

அன்லாக் 4.0: என்னென்ன தளர்வுகளை எதிர்பார்க்கலாம்? + "||" + Unlock 4.0: What to expect from September 1

அன்லாக் 4.0: என்னென்ன தளர்வுகளை எதிர்பார்க்கலாம்?

அன்லாக் 4.0: என்னென்ன தளர்வுகளை எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு 158 நாட்கள் ஆகின்றன.
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, தற்போது அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.  செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கின் 4- ஆம் கட்ட தளர்வுகள் இருக்கும்   ஊரடங்கு கட்டுப்பாடுகள்  கொண்டு வரப்பட்டு இன்றோடு 158 நாட்கள் ஆவதால், தளர்வுகளை மக்கள்  ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். அன்லாக் 4.0 -வில் என்னென்ன தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதை பற்றி கீழ் காண்போம்.
  • மெட்ரோ ரெயில் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளான பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படலாம்.
  • பள்ளி, கல்லூரிகள் செயல்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 
  • பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம். ஆனால், அமர  அனுமதி இருக்காது என்று சொல்லப்படுகிறது
  • சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால் திரையரங்குகளை திறக்க அனுமதி இருக்காது எனக்கூறப்படுகிறது 
  • மும்பையில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இருக்க வாய்ப்பில்லை.
  • சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் கொல்கத்தா  வர விதிக்கப்பட்ட தடையை மேற்கு வங்காள அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி தளர்த்த உள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவையை துவங்க மம்தா பானர்ஜி அனுமதி கொடுத்துள்ளார் 

இதுபோன்ற தளர்வுகள் இருக்கலாம் என மக்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் ஊரடங்கு பெருமளவில் தளர்வு: ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் இன்று(செவ்வாய்க் கிழமை) ரெயில், பஸ்-ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதாக எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதன் மூலம் கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளது.
2. சிங்கப்பூரில் ஊரடங்கில் தளர்வுகள்- சலூன் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
3. தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை- மருத்துவ நிபுணர் குழு
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
4. டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
5. கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" - மாவட்ட ஆட்சியர்
கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது" என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.