தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது + "||" + The number of corona experiments in India has crossed 4 crore

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று வரை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் பாதிப்புக்கு அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.  இதனை தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 76,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,63,973 ஆக உள்ளது.

இதுவரை 7,52,424 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,48,999 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புகளால் 1,021 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  இதனால், தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து வருகிறது.  இதேபோன்று கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, இன்று வரை நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது 4 கோடி என்ற அளவை கடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தொற்று அதிகரிப்பதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கொரோனா பரிசோதனை - ஒரு வாரத்தில் 1,500 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
தொற்று அதிகரிப்பதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு வாரத்தில் 1,500 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம்-களப்பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்
கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி- சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளும் அதிகரித்து வருகிறது
4. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை; அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கும் நடத்தப்பட்டது
தமிழக சட்டசபை வருகிற 14-ந்தேதி கூட இருப்பதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
5. கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவத்தை தாமதப்படுத்தக்கூடாது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.