மாநில செய்திகள்

வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி தொடர்ந்து அழுத்தம்: வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம் + "||" + Death of a youth who caught fire before the bank

வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி தொடர்ந்து அழுத்தம்: வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்

வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி தொடர்ந்து அழுத்தம்: வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்
வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி தொடர்ந்து அழுத்தம் தந்ததால் தஞ்சை அருகே வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை,

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது40). இவருடைய மனைவி ஹேமா. இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனந்த் வெல்டராக வேலை பார்த்துவருகிறார். ஆனந்த், வல்லம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் வங்கி ஒன்றில், 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.


அதில், வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் திருப்பிச் செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வங்கித் தரப்பில், `மேலும் ரூ.6 லட்சம் கடன் தொகை நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அதை உடனே திருப்பிச் செலுத்துங்கள் என ஆனந்த்துக்கு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து பதறிய அவர் வங்கிக்குச் சென்று மேனேஜர் மற்றும் ஊழியர்களிடம், `பணம் செலுத்துவதற்குக் கால அவகாசம் கொடுங்கள். உடனே கட்ட முடியாது. கொரோனா காலத்தில் பிழைப்பே இல்லாமல் இருக்கிறேன் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு வங்கித் தரப்பில், கால அவகாசம் தரமுடியாது உடனே மீதி பணத்தை கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் வங்கியைவிட்டு வெளியே வந்த ஆனந்த், வங்கி வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். பட்டப்பகலில், அதுவும் வங்கி வாசலில் ஒருவர் தீவைத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்து பதறியடித்து ஓடிவந்த ஆனந்த்தின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர், இந்த முடிவை ஏன் எடுத்தீங்க..?’ எனக் கேட்டு கதறினர்.

எனக்கு வேற வழி தெரியலை என்று ஆனந்த் அந்த நிலையிலும் கூறியது அங்கிருந்தவர்களை கண்களைக் கலங்கவைத்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம் அடைந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.