தேசிய செய்திகள்

விவசாயம் பற்றிய கல்வியை பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டியது அவசியம்; பிரதமர் மோடி + "||" + It is necessary to include education about agriculture in school subjects; PM Modi

விவசாயம் பற்றிய கல்வியை பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டியது அவசியம்; பிரதமர் மோடி

விவசாயம் பற்றிய கல்வியை பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டியது அவசியம்; பிரதமர் மோடி
விவசாயம் மற்றும் அதன் நடைமுறை செயல்பாடுகள் பற்றிய கல்வியை பள்ளி பாடங்களில் சேர்க்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் ஜான்சி நகரில் ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாக கட்டிடங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து பேசினார்.  அவர் பேசும்பொழுது, விவசாயம் மற்றும் அதன் நடைமுறை செயல்பாடுகள் தொடர்புடைய கல்வியை பள்ளி கூடங்களில் சென்று சேர்க்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

கிராமங்களில் உள்ள நடுநிலை பள்ளிகளில், வேளாண்மையை ஒரு பாடம் ஆக அறிமுகம் செய்ய வேண்டிய முயற்சியை எடுக்க வேண்டும்.  வேளாண்மையில் சுய சார்பு என்பது பற்றி நாம் பேசும்பொழுது, உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்ற அளவில் நின்று விடாமல், கிராமத்தின் மொத்த பொருளாதாரமும் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயம் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பம் உதவுகிறது.  சமீபத்தில் 10 மாநிலங்களில் வெட்டு கிளிகளின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை குறைப்பதற்கு தொழில் நுட்பத்தினை அரசு எப்படி பயன்படுத்தியது என்பது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.