மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை + "||" + Chief Minister Edappadi Palanisamy's key consultation with the Medical Expert Committee

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.  ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இன்று மாலையே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு தொடரவே மருத்துவ குழுவின் முந்தைய பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது.