மாநில செய்திகள்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு + "||" + Completion of the consultation conducted by Chief Minister Palanisamy

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.
சென்னை,

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் சவாலாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


 ‘இ-பாஸ்’ நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பின்பற்றும்பட்சத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 4 மணி நேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  அதனை தொடர்ந்து  இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. 7-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் புதிய தளர்வுகள் அறிவிப்பது பற்றி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசித்தாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்டு அறிந்து புதிய தளர்வுகள் பற்றி  முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கிறார்.