தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை + "||" + Union Minister Amit Shah has made a full recovery; Delhi AIIMS Hospital

மத்திய மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

மத்திய மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவலாக பலரை பாதித்துள்ளன.  பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை.  இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இதன்பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

கடந்த 18ந்தேதி காலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், மந்திரி அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார்.  அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் 7 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலி
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பணி பாதுகாப்பில்லா சூழலால் கொரோனா பாதிப்புகளில் சிக்கி 7 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பலியாகி உள்ளனர்.
2. கொரோனா பாதிப்பு; லத்தீன் அமெரிக்காவில் 2.5 லட்சம் பேர் பலி
கொரோனா பாதிப்புகளால் லத்தீன் அமெரிக்காவில் இதுவரை 2.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
3. தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. இந்தியாவில் கொரோனா நோயாளிகள்; ஆண்கள் 76%, பெண்கள் 24%
இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் 76% பேர் ஆண்கள் என்றும் 24% பேர் பெண்கள் என்றும் சுகாதார துறை தெரிவித்து உள்ளது.