மாநில செய்திகள்

அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு + "||" + Only by following the instructions can the spread of the disease be reduced Chief Minister Palanisamy

அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
கொரோனா தொடர்பான அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.  ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆற்றிய நிறைவுரையில்,

அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது.


கொரோனா காலத்திலும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளதால் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.  திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திலும் அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது.

அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும். தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனைகளை அதிகப்படுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கே வழங்கப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.