மாநில செய்திகள்

தமிழக மாநில பாஜக துணை தலைவராக அண்ணாமலை நியமனம் + "||" + Annamalai appointed BJP vice president of Tamil Nadu

தமிழக மாநில பாஜக துணை தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக மாநில பாஜக துணை தலைவராக அண்ணாமலை நியமனம்
தமிழக மாநில பாஜக துணை தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

கர்நாடக மாநில ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலை. இவரது அதிரடி பணியை பாராட்டி கர்நாடக மக்கள் இவரை ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தனர். இவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியது. ரஜினிகாந்த் தொடங்கப்போகும் கட்சியில் அண்ணாமலை முதல்-அமைச்சர் வேட்பாளராக கூட ஆகலாம் என்றும் பேசப்பட்டது.


இந்தநிலையில் ஆகஸ்ட் 25-ம் தேதி அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சி உறுப்பினர் அட்டையும் வழங்கினார்.

இந்நிலையில் தமிழக மாநில பாஜக துணை தலைவராக  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 

அண்மையில் டெல்லி சென்று முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, திடீரென பதவி விலகி அரசியலில் குதித்தார்.