மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் - பினராயி விஜயன் வேண்டுகோள் + "||" + Onam festival is taking place this year, when state is witnessing a spike in COVID19 cases Kerala CM

சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் - பினராயி விஜயன் வேண்டுகோள்

சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் -  பினராயி விஜயன் வேண்டுகோள்
கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என்று பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கொரோனா நிலவரம் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை மக்களுக்கு நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.


கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும். பொது கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற முடிவில் கேரள அரசு உறுதியாக உள்ளது. மாநிலங்களுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசு தரவேண்டியது அரசியலமைப்பு உரிமை.

கொரோனாவால் புதிதாக 2,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.