தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31-ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு + "||" + Supreme Court to pronounce its order on the point of sentence against lawyer Prashant Bhushan in connection with the suo motu criminal contempt case for his tweets, on August 31.

பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31-ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு

பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31-ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு
பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில் ஆக.31இல் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.


இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் (ஆக.31-ம் தேதி) தண்டனையை  உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.