தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 81% பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தகவல் + "||" + 81% of corona deaths in the country are reported to be from 7 states

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 81% பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தகவல்

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 81% பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தகவல்
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்த 81% பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  கொரோனா வைரசின் பாதிப்புகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக உயர் மட்ட அளவிலான மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவின் 20வது ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தலைமையில் இன்று நடந்தது.  இதில் சுகாதார மந்திரி பேசும்பொழுது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை கூட்ட தொடர்களுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை அடங்கிய செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி தனது அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.

இதேபோன்று திருவிழா காலங்கள் வரவுள்ள நிலையில், ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் மற்றும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் முறையாக நடந்து கொள்ளும்படியும் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், நாட்டில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் 81% பேர் மராட்டியம், டெல்லி, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதேபோன்று கொரோனா பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் 73% பேர் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; 155 சுகாதார பணியாளர்கள் கடந்த 11ந்தேதி வரை உயிரிழப்பு
கொரோனா பாதிப்புக்கு கடந்த 11ந்தேதி வரை 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.