உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு + "||" + At least 160 killed in Afghanistan flash floods

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர். 15 பேர் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.