தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 16,867 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 16,867 new COVID19 cases, 11,541 discharges and 328 deaths reported in Maharashtra today.

மராட்டியத்தில் மேலும் 16,867 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 16,867 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 16,867 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் மராட்டியத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,


கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,867 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,64,281-ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,85,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11,541 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 5,54,711-ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 72.58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 328 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,103-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 3.15 சதவிகிதமாக உள்ளது மராட்டியத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 7.64 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.