உலக செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம் தேதி வரை தடை + "||" + Malaysia’s recovery movement control order extended to Dec 31, tourists still not allowed in: PM Muhyiddin

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம் தேதி வரை தடை

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம்  தேதி வரை தடை
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்,

மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மக்களுக்கு  தொலைக்காட்சியில் உரையாற்றிய  பிரதமா் முஹைதீன் யாசின்  கட்டுப்பாடுகள் குறித்து கூறியதாவது: “:உலகின் பிற நாடுகளில்  கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது.

இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது.மேலும், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன.” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூருவுக்கு 3-வது இடம்
நாட்டிலேயே கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
2. மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. குப்புறப்படுத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
4. 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
சட்டசபை நாளை கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாதிப்பு இல்லை.
5. மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.