மாநில செய்திகள்

மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of heavy rain in Madurai, Trichy, Namakkal and Salem - Meteorological Department Information

மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 தினங்களுக்கு மேலாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. 

அந்த வகையில் தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3. மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
தமிழகத்தில் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை. எனினும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
4. சென்னை, திருச்சி உள்பட 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
தமிழகத்தில் 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
5. மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.